கவுத்திடுச்சே ஆஸ்கர்… காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்!

கவுத்திடுச்சே ஆஸ்கர்… காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்!

News timeline

Videos
1 month ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
1 month ago

Gulaebaghavali Official Trailer

Videos
1 month ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
1 month ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
1 month ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
1 month ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
1 month ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
1 month ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
3 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
3 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
3 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
3 months ago

Naachiyaar – Official Teaser

Videos
3 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
5 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
6 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
7 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
7 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
9 months ago

Kaala First Look Posters

Exclusive
9 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
9 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்!

dhanush-kaaka-muttai

ஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து போகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை காக்கா முட்டைக்குக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்…

அந்தப் படத்துக்கு பதில் ‘கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, காக்கா முட்டை, பாகுபலி, பிகே, ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

அவற்றில், புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கியுள்ள கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டின் சிறந்த படம் என்கிற தேசிய விருது கிடைத்த இந்தப் படம் ரூ 3.5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டது. இதுவரை சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 17 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது.

விமரிசகர்கள் பலரும் இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட் படமே தேர்வாகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். வெளிநாட்டு இதழ்களிலும் இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தன. பல மட்டத்திலும் இந்தப் படம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இத்தனை சாதக பலன்களும் காக்கா முட்டைக்கு இல்லை. தேசிய அளவில் சிறந்த குழந்தைகள் படம் என்கிற விருதைப் பெற்றது. நிறைய பாராட்டுகளை வட இந்தியாவிலும் பெற்றது. சர்வதேசப் படவிழாவிலும் கலந்துகொண்டது. ஆனால் கோர்ட்டுக்குக் கிடைத்த ஏராளமான விருதுகள், சிபாரிசுகள், பாராட்டுகளுடன் ஒப்பிடும்போது காக்கா முட்டை பின்தங்க வேண்டியதாகப் போய்விட்டது.

காக்கா முட்டை தமிழ் சினிமாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைத் தரும் என்றுதான் அதன் இயக்குநர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்கள் தனுஷ் – வெற்றிமாறன் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் கோர்ட் நுழைந்தது அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிவிட்டது.
தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *