மாயா விமர்சனம்

மாயா விமர்சனம்

News timeline

கோலிவுட்டில் இன்று
8 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
8 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

மாயா விமர்சனம்

 

Tamil Actress Nayanthara in Maya Movie Stills

Tamil Actress Nayanthara in Maya Movie Stills

மீபத்திய பேய்ப் பட வரவுகளில் மாயா கொஞ்சம் வித்தியாசமான படம்தான்.

நயன்தாராவும் அவர் கணவரும் நடிகர்கள். இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேற்றுமை வர, கைக்குழந்தையுடன் போய் தோழியின் வீட்டில் தங்கிக் கொள்கிறார் நயன்தாரா. தோழி வீட்டில் அவ்வப்போது ஏதோ அமானுஷ்யமாக நடப்பதை உணர்கிறார். ஆனால் அதை மேற்கொண்டு ஆராயாமல், பிழைப்புக்கு வழி தேட ஆரம்பிக்கிறார். பணக்கஷ்டம் அதிகரிக்கிறது. இவரது தோழி ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்க்கிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாகப் பார்த்தால் ரூ 5 லட்சம் பணம் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்.

இதற்கு இணையாக இன்னொரு கதை… அதில் ஓவியராக வரும் ஆரி, ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறார். அந்தப் பத்திரிகையில் மாயவனம் என்ற ஒரு மர்ம காட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு மனநோயாளிகளுக்கென்று ஒரு மருத்துவமனை இருந்திருக்கிறது. அங்கு நோயாளிகளை ஆராய்ச்சி என்ற பெயரில் மிகக் கொடூரமாகக் கொன்று அங்கேயே புதைத்திருக்கிறார்கள். அங்கு வைத்து சிதைக்கப்பட்ட மாயா என்ற பெண், இவர்களது ஆராய்ச்சியால் பார்வையிழந்து, கைக் குழந்தையை அநாதையாக விட்டு இறக்கிறாள். அவள் கையில் போட்டிருந்த பல கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தோடு புதைக்கப்படுகிறாள்.

இவையெல்லாம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, மாயவனம் காட்டுக்குள் அந்த மோதிரத்தைத் தேடி, புதைக்கப்பட்ட ஒவ்வொரு குழியையும் தோண்டுகிறது ஒரு கும்பல். அப்போது மாயாவின் சவக்குழியையும் தோண்டும்போது, அந்த ஆவி கிளம்புகிறது…

பேய்ப் படத்தைப் பார்க்கும் நயன்தாராவும், இந்த மாயவனம் காட்டுக்கு வந்துவிடுகிறார்… அது எப்படி என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

படம் முழுக்க நயன்தாராவின் ராஜ்ஜியம்தான். அலட்டலில்லாத நடிப்பு. ஒரு படத்தில் நாயகித் தேர்வுக்கு வரும் நயன்தாராவுக்கு இயக்குநர் டெஸ்ட் வைக்க, அதில் நயன்தாராவின் நடிப்பு… அடேங்கப்பா. நயன்தாரா எப்படி இத்தனை ஆண்டுகள் முன்னணி நாயகியாகத் திகழ்கிறார் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும்… பானை சோற்றுக்குப் பதம்!

Nayantara Hot Navel Stills In White Saree from KVJ

கொடுத்த வேலையை வரம்பு மீறாமல் இயல்பாகச் செய்திருக்கிறார் ஆரி.

இயக்குநராக வரும் மைம் கோபி, அவரது உதவி இயக்குநராக வரும் லட்சுமி பிரியா, ஆரியின் காதலியாக வரும் ரேஷ்மி மேனன் என அனைவருமே மிகக் கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளனர். வெல்டன்!

பேய்ப் படங்களுக்கே உரிய த்ரில் காட்சிகள் அங்கங்கே வருகின்றன. ஆனால் அந்த த்ரில்லை சாதாரணமாக்கிவிடுகின்றன நீ…ளமான படமாக்கம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நீட்டி முழக்கி இருப்பது, படத்துக்குள் ரொம்ப நேரம் உட்கார்ந்த அலுப்பைத் தருகின்றன.

மாயவனம் காட்டை சென்னைக்குப் பக்கத்தில் 13 கிமீட்டரில் இருப்பதாகக் காட்டுகிறார்கள். குறைந்தது 50 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்த மாதிரி காடுகளே இல்லையே… கொஞ்சம் பொருத்தமாக பொய் சொல்லக் கூடாதா?

தலைநகருக்கு அத்தனை கிட்டத்தில் உள்ள மாயவனம் காட்டுக்குள் நடப்பதாக சொல்லப்படும் சம்பவங்களை அரசும் போலீசும் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தன?

அங்கு படமாக்கப்பட்டுள்ள காட்சிகளில் செயற்கை இருள் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. எதற்காக பாதிப் படத்தை கறுப்பு வெள்ளையில் காட்டினார்களோ…

இப்படி குறைகளை அடுக்கலாம்.

ரான் ஏதன் யோஹனின் பின்னணி இசை த்ரில் காட்சிகளில் மிரட்டுகிறது. ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

அஸ்வின் சரவணன் தன் முதல் படத்தையே, பாதுகாப்பான பேய்ப் படமாகக் கொடுத்து தப்பித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *