அஜீத்துக்கு மாரடைப்பு வந்த கதை!
போகிற போக்கைப் பார்த்தால் இந்த ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிடலாம் என்ற முடிவுக்கு அஜீத்தும் விஜய்யும் வந்துவிடுவார்கள் போலிருக்கிறது. இத்தனைக்கும் அஜீத் எப்போதோ மன்றங்களே வேண்டாம் என அறிவித்துவிட்டார்.
இருந்தாலும் அடங்காத அவரது ரசிகர்கள் ஆளுக்கொரு குரூப்பாகக் கிளம்பி, விஜய் படங்கள் வரும்போது அவரையும் படத்தையும் ஓட்டு ஓட்டு என்று ஓட்டித் தள்ளுகிறார்கள்.
இதனைப் பொறுக்க முடியாமல் போலீஸில் புகார் செய்து ஒரு சமூக வலைப் பக்கத்தை நீக்கியும் பார்த்தார்கள். ஆனால் மீண்டும் அந்தப் பக்கம் செயல்பட ஆரம்பித்து, விஜய்யை தொடர்ந்து கிண்டலடித்து வருகிறது.
அதற்கு பதில் கொடுப்பதாக நினைத்து ‘அஜீத்துக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் சீரியஸ்.. கடவுளிடம் வேண்டிக்குங்க’ என கொளுத்திப் போட்டுவிட்டது விஜய் ரசிகர்கள் தரப்பு. அதுவும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் ட்விட்டர் பக்கத்தைப் போலியாக ஒரு பக்கத்தை டிசைன் செய்து, அதில் இப்படி போட்டிருந்தனர்.
விஷயத்தை தீவிரமாக விசாரித்தபோதுதான் இது, ரசிகர்களின் அரசியல்.. வம்புச் சண்டை என்பது தெரியவந்தது!
இப்படி ஒரு வெட்டிக் கும்பல் தேவையா?
-தமிழ்சினிமாலைவ்