News timeline

கோலிவுட்டில் இன்று
4 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
6 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
6 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
6 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
6 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
6 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
6 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
6 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
6 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
8 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
8 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
8 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
8 months ago

Naachiyaar – Official Teaser

Videos
8 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
10 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
11 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
12 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
12 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

நயா பைசா தரவில்லை… அலப்பறைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை!

ajith-vijay

சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு பலர் உதவிக் கரம் நீட்டி உள்ளனர்.

பணமாக, பொருளாக எத்தனையோ பேர் உதவ வந்தாலும், அவர்களில் சினிமாக்காரர்களின் பங்களிப்பு என்ன என்று பார்ப்பது நமது மக்களின் வழக்கமாகிவிட்டது.

இணையவெளியில் பார்த்தால், ரஜினி 10 கோடி கொடுத்தார், விஜய் 5 கோடி கொடுத்தார், அஜீத் 60 லட்சம் கொடுத்தார் என்று அடித்துவிட்டிருந்தனர்.

இன்னும் சில பல படிகள் மேலே போய் ஷாரூக்கான் ரூ 100 கோடி கொடுத்துவிட்டார் என்றார்கள்.

சரி உண்மை நிலை என்ன?

நடிகர்களில் அதிகபட்சமாக நிதி கொடுத்தவர் நடிகர் ஷாரூக்கான். ரூ 1 கோடியை தன் ரெட் சில்லி நிறுவனம் சார்பாகவும் அடுத்து வரவிருக்கும் அவரது தில்வாலே படக்குழு சார்பிலும் அளித்துள்ளார். சமீபத்தில் ஷாரூக்கானின் படங்கள் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. அதற்கு ஒரு நன்றிக் கடன் இது.

அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரூ 25 லட்சம் அளித்துள்ளார். ஹன்சிகா ரூ 15 லட்சம், பாகுபலி நாயகன் பிரபாஸ் 10 லட்சம், சூர்யா, கார்த்தி, சிவகுமார் இணைந்து ரூ 25 லட்சம் வழங்கியுள்ளனர். தனுஷ், சிவகார்த்திகேயன் தலா ரூ 5 லட்சம் அளித்துள்ளனர்.

ரஜினியின் கதை தனி. அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் அளித்துள்ளார். மருமகன் தனுஷ், மகள்களுடன் இணைந்து ரூ 5 கோடிக்கு மேல் நிவாரணப் பொருள்களைக் கொடுத்துள்ளார். தனது திருமண மண்டபத்தை 3 தினங்கள் ஏழை மக்கள் தங்க அனுமதி அளித்துள்ளார். மற்றபடி அவர் ரூ 10 கோடியை முதல்வரிடம் கொடுத்ததாக சமூக வலைத் தளங்களில் உலா வரும் தகவல் ரசிகர்களின் கைங்கர்யம்தான்!

சித்தார்த், ராகவா லாரன்ஸ், பார்த்திபன், 72 வயதிலும் தளராத இளையராஜா, சீமான் போன்றவர்கள் செய்து வரும் களப்பணிகள் பண மதிப்புக்கு அப்பாற்பட்டவை.

விஜய், அஜீத், விக்ரம், கமல் ஹாஸன், நயன்தாரா போன்ற முன்னணிக் கலைஞர்கள் நயா பைசா கூட இதுவரை தரவில்லை. இவர்களில் விஜய் தனது இரு திருமண மண்டபங்களை மழை நாளில் மக்களுக்குத் திறந்துவிட்டார் என்ற செய்தியும், அஜீத் தன் வீட்டில் 200 பேரைத் தங்க வைத்தார் என்று வெளியான செய்தியும் முற்றிலும் பொய்யானவை. அந்த நாட்களில் விஜய்யின் மண்டபங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன. அஜீத் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்!

விக்ரம் தரப்பில் பேச்சு மூச்சே இல்லை.

kamal-hassan- 1

கமல் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. யாரும் தன்னிடம் நிதி கேட்க முடியாதபடி அரசுக்கு எதிராக ஒரு ஸ்டன்ட் அடித்து, அடுத்த சில தினங்களில் பல்டியடித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் இவர்களின் ரசிகர்கள் செய்து வரும் ஆன்லைன் அலப்பறைகளுக்கு மட்டும் குறைச்சலே இல்லை.

தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *