News timeline

கோலிவுட்டில் இன்று
8 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
8 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

ரஜினி வாழ்க்கை வரலாறு… அதையும் சொதப்பிடாதீங்க மணிரத்னம்!

ரஜினி வாழ்க்கை வரலாறு…

rk-mr

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கிறேன் என்ற பெயரில் முன்னுக்குப் பின் முரணாக எதையாவது எடுத்து சொதப்புவது மணிரத்னத்தின் வாடிக்கை.

எம்ஜிஆரின் வாழ்க்கைக் கதை என்ற பெயரில் இருவர் என்ற இரண்டும்கெட்டான், குரு என்ற பெயரில் அம்பானி பற்றி ஒரு அரைவேக்காட்டு கதை என்று எடுத்து கெடுத்து வைத்தார்.

ராமாயணம், மகாபாரதம், ஈழப் போர், கிழக்கு தீவிரவாதம், காஷ்மீர் பிரச்சினை என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை இவர்.

இப்போது ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவது நல்ல யோசனை என்று ஆரம்பித்துள்ளார்.

8-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், ‘எம்ஜிஆர், அம்பானி போன்ற பல முன்னணி நபர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் எடுத்துள்ளீர்கள். ஏன் ரஜினிகாந்த் வாழ்க்கையை மையப்படுத்தி படம் எடுக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு இயக்குநர் மணிரத்னம், “ரஜினிகாந்த் வாழ்க்கையைப் படமாக எடுப்பது நல்ல யோசனைதான். ஆனால் ரஜினிகாந்தின் ஆளுமையை திரையில் கொண்டு வர, அதற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் கிடைத்தால்தான் என்னால் அதைச் செய்ய முடியும். அப்படி ஒரு நடிகர் கிடைப்பாரா?

நான் ரஜினியுடன் ஒரே ஒரு முறை தான் வேலை பார்த்துள்ளேன். அது அற்புதமான அனுபவம். ரஜினி என்ற நட்சத்திரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த நடிகரை என்னால் முடிந்தவரை வெளிக்கொண்டு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

தன் தொழில்மீது அவருக்கிருக்கும் அர்ப்பணிப்பு எனக்குப் பிடிக்கும். நாங்கள் மைசூரில் ‘தளபதி’ படப்பிடிப்பில் இருக்கும்போது அவரது ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துவிடுவார்கள். பெங்களூரிலிருந்து கூட அவ்வளவு தூரம் பயணம் செய்து அவரைப் பார்ப்பதற்காகவே பலர் வந்தனர். அது படப்பிடிப்புக்கு தொந்தரவாக இருந்தாலும் அவர் முடிந்தவரை ரசிகர்களை சந்தித்துப் பேசுவார், படப்பிடிப்பு பாதிக்காமலும் பார்த்துக் கொள்வார்,” என்று பதிலளித்துள்ளார்.

அப்படி சிறந்த கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைச் சொதப்பாமல் எடுக்கணும் மணிரத்னம்…!

தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *