News timeline

கோலிவுட்டில் இன்று
1 month ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
1 month ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
8 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

இனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்! – எஸ்பிபி அறிவிப்பு

ilayaraja-and-spb-771x434
லாஸ் ஏஞ்சல்ஸ் (யுஎஸ்): இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன் என பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

பாடகர் எஸ்.பி.பி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

என்னுடைய ரசிகர்களுக்கு வணக்கம். கடந்த வார இறுதியில் சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடந்த இசைக் கச்சேரிகளுக்கு வந்தவர்களுக்கும், நிகழச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், என்னுடைய மகன் சரண், பாடகி சித்ரா மற்றும் இசைக் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது. மீறிப் பாடினால் அபராதத் தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

எனது மகன் சரண் சர்வதேச அளவில் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து, அதற்கு எஸ்.பி.பி.50 என்று பெயர் வைத்து டொரண்டோவில் தொடங்கினோம். இதனைத் தொடர்ந்து ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் இசைக் கச்சேரியை நாங்கள் நடத்தி வருகிறோம்.

ஆனால் அப்போதெல்லாம் வராத நோட்டீஸ், இப்போது வந்துள்ளது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இது தான் சட்டம் என்றால் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். எனவே இந்த சூழலில், இனிமேல் நானும், எங்கள் குழுவினரும் இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை இசைக் கச்சேரியில் பாட மாட்டோம். ஆனால் கச்சேரி நடக்க வேண்டும். கடவுளின் அருளால் இளையராஜா தவிர, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை நான் பாடியுள்ளேன். அந்தப் பாடல்களை இனிவரும் இசைக் கச்சேரிகளில் நான் பாடுவேன். இனிவரும் இசைக் கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

உங்கள் அனைவரிடமும் என்னுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால் இது குறித்து எந்த விவாதமோ, கருத்தோ கூறவேண்டாம். கடவுளின் எண்ணம் எதுவோ அதுவே நடக்கட்டும்.”

-இவ்வாறு தனது ஃபேஸ்புக் பதிவில் எஸ்.பி.பி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *