சென்னை: மணிரத்னத்தை மட்டும் நான் பார்க்காமல் போயிருந்தால் இன்று இப்படி ஒரு இடம் சினிமாவில் எனக்குக் கிடைத்திருக்காது என்றார் ஏ ஆர் ரஹ்மான்.
மணிரத்னம் இயக்கியுள்ள புதிய படமான காற்று வெளியிடையின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.
படத்தின் இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் பேசுகையில், “இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம். நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் இன்று நான் இருக்கும் இடம் எனக்கு கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு புனிதமான அனுபவம். வைரமுத்து சாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
1992-ல் ரோஜா படத்தில் ஏஆர் ரஹ்மானும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு இந்த ஜோடி பிரியவே இல்லை. தொடர்ந்து 25 ஆண்டுகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. வெள்ளி விழா ஸ்பெஷலாக காற்று வெளியிடை வெளியாகியுள்ளது.