News timeline

கோலிவுட்டில் இன்று
1 month ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
1 month ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
8 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

தலைவரை நிம்மதியா இருக்க விடுங்கப்பா.. தொண்டன் லாரன்சின் சில வலிகள்!

Rajin TL

லைக்கா நிறுவனம் சார்பில் இலங்கையில் ஈழத்தமிழருக்கு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் வீடுகளை அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ள இருந்ததும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அவர் அந்தப் பயணத்தை ரத்து செய்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த விவகாரத்தை முன்வைத்து இணையத்தில் வழக்கம்போல் சம்பந்தப்பட்டவர்களின் தலையை உருட்டி வருகிறார்கள். ரஜினியை பலரும் விமர்சிப்பதை தொண்டர் லாரன்சால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வலி மிகுந்த பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அன்புள்ள நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்…

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.

நான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர்.

இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.

பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அநேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும்போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர்.

இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்.

சிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

– இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *