News timeline

கோலிவுட்டில் இன்று
4 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
6 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
6 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
6 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
6 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
6 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
6 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
6 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
6 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
8 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
8 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
8 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
8 months ago

Naachiyaar – Official Teaser

Videos
8 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
10 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
11 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
12 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
12 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

கடம்பன் விமர்சனம்

Kada
தங்களது வாழ்வாதாரமான காட்டை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியின் சதிகளை உடைத்து அவர்களை அழித்து காட்டைக் காப்பவனே கடம்பன்.

மேற்கு தொடர்ச்சி மலையில் கடம்பவனம் பகுதியில் மலை வாழ் மக்களாக ஒரு கூட்டம் வசிக்கிறது. அந்தக் கூட்டத்தில் தலைவனாக கடம்பன் இருக்கிறான். மலை, காடு, வனவிலங்குகள் என்று வாழ்க்கையை கொண்டாடிக்கொண்டிருக்கும் கூட்டம் மலையைவிட்டு இறங்க மறுக்கிறது.

அந்த பகுதி ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு சிமெண்ட் எடுக்கத் தேவை. சதிகளால் கடம்பவன மக்களை விரட்ட நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியின் திட்டம் பலிக்காததால் ஆயுதங்களால் விரட்ட நினைக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் பலியாவது யார் யார்? தங்கள் கூட்டத்தை எப்படி பாதுகாக்கிறான் கடம்பன் என்பதே மீதி கதை.

கடம்பனாக காட்டை மட்டுமல்லாது படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார் ஆர்யா. நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அதில் ஓரளவுக்கு முயற்சியும் பண்ணியிருக்கிறார்.

மற்றவர்களுக்கு திரைக்கதையிலேயே பெரிய வேலை இல்லை. எனவே சொன்னதை மட்டும் செய்து படத்தை போரடிக்க வைக்கிறார்கள்.

திரைக்கதை, வசனமும் அநியாயத்துக்கு பழைய பாணியில் அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவும் இந்த கழுதை கல்யாணத்துக்கு இது போதும் என்ற லெவலிலேயே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ப்ளஸ்

மலைவாழ் மனிதனாகவே மாறிய ஆர்யாவின் உடற்கட்டு.
லொக்கேஷன்ஸ்.
கார்ப்பரேட் கம்பெனியின் சதிகளை அம்பலப்படுத்தியது.
தற்கால சூழலை நினைவுபடுத்தும் காடு, மலை வளம் பற்றிய கதைக்களம்.

மைனஸ்

பெரிய ட்விஸ்டுகள் இல்லாத போரடிக்கும் திரைக்கதை.
ஒட்டாத ஆர்யா கேத்ரீன் ரொமான்ஸ்.
பின்னணி இசை கூட தேறவில்லை.

ஒரு நல்ல கான்செப்டை எடுத்த இயக்குநர் ராகவன், அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்க மறந்துவிட்டார். கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளும், க்ளைமாக்ஸ் யானைகள் கூட்ட காட்சிகளும் இதனாலேயே விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.

– ராஜீவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *