News timeline

Exclusive
2 months ago

Kaala First Look Posters

Exclusive
2 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
2 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

Exclusive
2 months ago

சங்கிலி புங்கிலி கதவ தொற… வெற்றி விழா கொண்டாட்டம்!

Exclusive
2 months ago

வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’

Exclusive
2 months ago

நான் ஒரு பச்சைத் தமிழன்! – ரஜினிகாந்த் முழுப் பேச்சு

ரஜினி ஸ்பெஷல்
2 months ago

 ‘அந்த ஆண்டவன் துணையோடு நான் அரசியலுக்கு வந்தால்…….’ – ரஜினி!

Exclusive
3 months ago

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி 2

Videos
3 months ago

Vivegam Official Teaser

விமர்சனங்கள்
3 months ago

எய்தவன் விமர்சனம் – மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு?

Exclusive
3 months ago

கலைப்புலி தாணுவின் விஐபி 2… ஜூலை 18-ல் வெளியாகிறது! #VIP2

படங்கள்-சுடச்-சுட
3 months ago

Sketch Movie Stills

Videos
3 months ago

VIP 2 Release Date Teaser

Exclusive
3 months ago

கணவருடன் சண்டையா? -‘சிவகாமி தேவி’யின் விளக்கம் இது!

Exclusive
3 months ago

விஷால் பெயரைச் சொல்லி பிரபல தயாரிப்பாளரை மிரட்டும் நபர்!

Exclusive
3 months ago

எந்திரனை நெருங்கும் பாகுபலி… ஏழு நாட்களில் 72 கோடி வசூல்!

Exclusive
3 months ago

தனுஷ் படத்தில் சுனைனா!

Videos
3 months ago

Graghanam – Official Trailer

Exclusive
3 months ago

வாள் சண்டை கற்கும் ஸ்ருதி ஹாசன்!

Exclusive
3 months ago

எங்கம்மா ராணி படத்திற்கு ஏன் இசையமைத்தேன் தெரியுமா? – இசைஞானி இளையராஜா பேட்டி

எய்தவன் விமர்சனம் – மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு?

Yei

திரைக்கதையில் கட்டிப்போடும் சமீபத்திய படங்களான துருவங்கள் பதினாறு, மாநகரம், 8 தோட்டாக்கள் வரிசையில் இன்னொரு வரவு எய்தவன்.

அங்கீகாரம் பெறாத மருத்துவக்கல்லூரியில் தங்கையை சேர்த்ததால் கலையரசன் குடும்பத்தின் ஒட்டுமொத்த டாக்டர் கனவு பாழாகப் போகிறது. தங்கையை இழக்கும் கலையரசன் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துப் பையனாக ஒதுங்கிப்போகாமல் எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை.

ஹீரோ பெயர் கிருஷ்ணா, வில்லன் பெயர் கவுரவ், வில்லனை பழி வாங்க ஹீரோ பயன்படுத்திக்கொள்ளும் கேரக்டர் பெயர் தர்மன் என்று கேரக்டர்களின் பெயர்கள் முதல் திரைக்கதை வரை அத்தனையிலும் மகாபாரத ரெஃபெரன்ஸ். மாகாபாரதக் களத்தில் சமீபத்திய முக்கிய பிரச்னையை புகுத்தி பெர்ஃபெக்ட் த்ரில்லர் ஆக்கியதில் கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் சக்தி ராஜசேகரன்.

கலையரசனுக்கு அதே கண்களுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி ஒரு படம். மிடில் கிளாஸ் பையனாக தன் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். தங்கை இறந்ததன் ரகசியம் தெரியும் அந்த இடைவேளை காட்சி ரியாக்‌ஷன் செம… கெட்டப்களிலும் ரியாக்‌ஷன்களிலும் இன்னும் வித்தியாசம் காட்டினால் கமர்ஷியல் ஹீரோக்கள் பட்டியலில் விரைவில் இணையலாம்.

சாத்னாவுக்கு அதிகம் வேலையில்லை. க்ளைமாக்ஸில் இவரது கேரக்டரை அப்படியே விட்டது ஏன் இயக்குநர் சார்?

வில்லனாக வரும் கௌதம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி, தர்மனாக வரும் கிருஷ்ணா ஆகியோரும் தங்கள் கேரக்டர்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான். எந்த இடத்திலும் போரடிக்காமல் நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கிறது. வசனங்களும் சில இடங்களில் கிளாப்ஸ் அள்ளுகின்றன.

பின்னணி இசை த்ரில்லருக்கான வேகத்தைக் கூட்டியிருக்கிறது.

எய்தவன் – வென்றுவிட்டான்.

-ஆர்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *