News timeline

கோலிவுட்டில் இன்று
7 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
7 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
8 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
8 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
8 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
8 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
8 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
8 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
8 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
8 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
10 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
10 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
10 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
10 months ago

Naachiyaar – Official Teaser

Videos
10 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
12 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

EASK

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இந்த டைட்டிலில் ஒரு படம் உருவாகி வருவதாக சொன்னபோது சிரித்தார்கள். ஆனால் இயல்பான காமெடி படமாக அது அமைந்ததால் யாரும் எதிர்பாராத விதமாக மெகா ஹிட் அடித்தது. அதேபோல் என் ஆளோட செருப்ப காணோம் என்று வித்தியாசமான டைட்டிலுடன் களம் இறங்கியிருக்கிறார் ஜெகன். இவர் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கியவர். பசங்க பாண்டி இந்த படத்தில் தமிழ் என்ற பெயரில் ஹீரோவாகவும், ஆனந்தி ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.

அதான்…டைட்டிலிலேயே கதையை சொல்லிவிட்டாரே இயக்குநர்… ஒருதலையாக தான் காதலிக்கும் பெண்ணின் செருப்பு தொலைந்துபோகிறது. அந்த செருப்புக்கும் ஹீரோயினின் அப்பாவின் உயிருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. எனவே அந்த செருப்பை தேடி செல்லும் ஒரு நாயகனின் கதை தான். 90 காலத்து கதையைத் தான் இப்போதைய காமெடி நடிகர்களை வைத்து கொஞ்சம் கிச்சுகிச்சு காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

தமிழாக அறிமுகமாயிருக்கும் பாண்டிக்கு நல்வரவு. காமெடி காட்சிகளில் ரசிக்க வைத்து எமோஷனல் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். ரொமான்ஸ் மட்டும் இன்னும் பயிற்சியும் முயற்சியும் தேவை.

ஆனந்தி வழக்கமான கேரக்டர் என்பதால் வழக்கமாகவே செய்யும் கடமையை செவ்வென ஆற்றியிருக்கிறார். ஹீரோயின் தோழியாக வர்றது யாருங்க? அவங்க நல்லா நடிச்சுருக்காங்க!

படத்தை கொஞ்சம் காப்பாற்றுவது யோகி பாபு தான். சின்ன சின்ன டைமிங் வசனங்களால் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

அவர் தவிர மற்ற கேரக்டர்கள் அனைத்துமே வீணடிக்கப்பட்டுள்ளன.

இடைவேளை வரை கலகலப்பாக நகரும் கதை இடைவேளைக்கு பின் படுத்து விடுகிறது. லிவிங்ஸ்டன், பாலசரவணன், சிங்கம்புலி, கே எஸ் ரவிகுமார் என ஆளாளுக்கு சில நிமிடங்களை எடுத்து நம்மை சோதிக்கிறார்கள்.

சுக செல்வனின் கேமரா காட்சிகளை அழகாக்கியுள்ளது. பின்னணி இசையை விட பாடல்களின் இசை தனித்து தெரிகிறது.

இரவில் வருகிற, அபிமானியே, செருப்பு பாடல் என மூன்று பாடல்களுமே நம் காதுகளை விட்டு அகல மறுக்கின்றன.

கம்பேக் என்னும் வாய்ப்பை காமெடி கலந்த பழைய காதல் கதையோடு வந்து கெடுத்துக்கொண்டிருக்கிறார் ஜெகன். செருப்பு போல காதல்களை மாற்றும் இந்த காலத்தில் ஒருவன் காதலியின் செருப்புக்கு முக்கியத்துவம் தருவதெல்லாம் ஓவர் சாரே?

செருப்புக்கும் அப்பாவுக்குமான செண்டிமெண்ட்டே பொய் என ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவதால் நமக்கு அந்த செருப்போடு பெரிய கனெக்‌ஷன் எதுவும் ஏற்படாமல் போகிறது. மொத்தத்தில் இந்த செருப்பு தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும் போகப்போக கடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *