News timeline

கோலிவுட்டில் இன்று
7 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
7 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Webp.net-resizeimage

சென்னை: அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் தனக்குமான நெருங்கிய தொடர்பை, இதுவரை எந்த மேடையிலும் சொல்லாத விஷயங்களை நேற்று மக்களிடையே பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள, எம்ஜிஆர் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து, ரஜினி பேசியதாவது:

நீதிமன்ற உத்தரவை மீறி, வழியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன; இது தவறு. இனிமேல், இந்த தவறை செய்யக் கூடாது. பேனர்கள் இடையூறாக இருந்திருந்தால், மக்கள் மன்னிக்கவும்.

நான், 1996ல் அரசியலில் ஈடுபடும் சூழல் வந்த போது, ‘அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்’ என வற்புறுத்தியவர்களில், ஏ.சி.சண்முகமும் ஒருவர். அவர், என் மீது கொண்ட அன்பு அளவு கடந்தது. ‘பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., சிலையை, நீங்கள் தான் திறக்க வேண்டும்’ என்றார்.

எத்தனையோ பெரிய மனிதர்கள் இருக்கும் போது, எம்.ஜி.ஆர்., சிலையை திறக்கும் தகுதி, எனக்கு உள்ளதா என்ற, சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கேட்ட போது, ‘எம்.ஜி.ஆர்., திரையுலகத்திலிருந்து வந்தவர். நீங்கள் அவரது நண்பர். எனவே, நீங்கள் திறக்க வேண்டும்’ என்றார். கடந்த ஜனவரி 17-ம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாளன்று இந்த சிலையைத் திறந்திருக்க வேண்டும்

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா இது. தற்போது, அவரது கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஊரெல்லாம் போய், நுாற்றாண்டு விழா கொண்டாடுகின்றனர். அவருக்கு தாய் வீடு திரையுலகம். இதய தெய்வம் எனக் கூறப்படும் ஜெயலலிதாவும், திரையுலகில் இருந்து வந்தவர். அதை மதித்து, திரையுலகினரை கூப்பிட்டு, பெரிய விழாவை நடத்தி, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்வர் என, எதிர்பார்த்தேன்.

அவ்விழாவில், எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு குறித்து பேச வேண்டும் என, நினைத்தேன். ஆனால், அதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, ஏ.சி.சண்முகம், இந்த விழாவை நடத்துகிறார்.

நான், சிவாஜியின் தீவிர ரசிகன். சென்னை வந்த பின், சினிமா உலகில் நுழைந்த பின், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., குறித்து கேள்விப்பட்டு, அவரது சாதனைகளைப் பார்த்து, வாழ்க்கையில் அவரது ரசிகனாகினேன். அவரது சாதனைகள் பெரிது. 1950களில், அவர் பெரிய, ‘ஆக்ஷன் ஹீரோவாக’ இருந்தார். திடீரென, 1952ல், சிவாஜி நுழைந்தார். நடிப்பு என்றால் என்ன என்று, காட்டி விட்டார்; ஒரு புரட்சியை உருவாக்கினார். அந்த கால கட்டத்தில், பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சிவாஜி பின்னால் சென்றனர். எம்.ஜி.ஆர்., கதை முடிந்து விட்டதாக நினைத்தனர். எம்.ஜி.ஆர். சொந்தமாக படம் தயாரித்தார். அந்தப் படத்தை, அவரே இயக்கினார். இவருக்கு, இது தேவையா என, நினைத்தனர். அந்த படம், ‘நாடோடி மன்னன்’. இதிகாசம் படைத்தது. இயக்குநர்கள் நடுங்கினர். தான் யார் என, நிரூபித்தார் எம்ஜிஆர். சினிமாவில் நடிப்பின் இமயமான சிவாஜியோடு போட்டியிட்டு, அவரை விட புகழ், பணம் சம்பாதித்து, பெரிய படங்கள் கொடுத்து, சாதனைப் படைத்தார். அரசியலில், அவருக்கு கருணாநிதி போட்டி. அவரை மாதிரி, ஒரு எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி, ராஜதந்திரி, இந்தியாவில் கிடையாது. ஆனால், அவரை, 13 ஆண்டுகள் கோட்டையில், முதல்வர் பதவி பக்கம் வர முடியாதபடி செய்தவர், எம்.ஜி.ஆர்.

இது சாதாரண சாதனையா? அவர் ஆட்சியில் சாமானிய மக்களுக்கு, மின்சாரம் சென்றது. குடிசை வீடுகளுக்கு, இலவச மின்சாரம் கொடுத்தார். சாலை போட்டார்; பஸ் விட்டார். பஸ் கட்டணம் ஏறவில்லை. மதிய உணவு, காமராஜர் கொண்டு வந்தார். அதை சத்துணவாக, அனைவருக்கும் உணவு வழங்கினார். சைக்கிளில், ‘டபுள்ஸ்’ போனால் பிடித்து விடுவர்; அந்த சட்டத்தை மாற்றினார். சந்தேகத்தில் யார் மீது வேண்டுமானாலும் வழக்குப் போடலாம் என்ற, சட்டத்தை மாற்றினார். அதனால்தான், 13 ஆண்டுகள் இருந்து, அமெரிக்காவில் படுக்கையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அவர் மாமனிதர். அவரது சமாதியில், இப்போதும் கடிகாரம் சத்தம் கேட்கிறதா என, மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்கும், இரண்டு நிகழ்ச்சி, அவருடன் நடந்துள்ளது. அவரை முதலில், நான் பார்த்தது, 1973ல், நடிப்பு கல்லுாரியில் படித்தபோது தான். வகுப்பில் இருந்து, போன் பேசுவதற்காக, வெளியில் வந்தேன். அப்போது, காரில் தொப்பி, கண்ணாடி போட்டு, ஆப்பிள் – மஞ்சள் கலரில், சூரியன் மாதிரி ஜொலித்து கொண்டு, இறங்கினார். அவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தார்களோ…

அதன் பின், 1975ல், ‘மூன்று முடிச்சு’ படம், வாகினி ஸ்டூடியோவில், ‘செட்’ போட்டிருந்தனர். ஒரு நாள் அனைவரும் அமைதியாக, அட்டென்ஷனில் இருந்தனர். கேட்டபோது ‘எம்ஜிஆர் ஷூட்டிங்’ என்றனர். தென்னிந்தியாவில், முதலில் வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் அமைத்தது அவர்தான்! முதலில் கேரவன் வைத்தவர் அவர்தான். ஏழைகளுக்கு மாதம்தோறும், 300 ரூபாய், 400 ரூபாய் எனக் கொடுப்பார். அதற்கு, ஆட்கள் வைத்திருந்தார். பணம் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கை.

1978ல், எனக்கு உடல் நிலை சரியில்லை. சென்னை, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நரம்பு தளர்ச்சி. எம்.ஜி.ஆர்., வாரம் ஒரு முறை, இரு முறை போன் செய்து, ‘எப்படி இருக்கிறார்’ என, விசாரித்தார். இரண்டு மாதங்கள்… நான் குணமடைந்த பின், வெளியில் விடவில்லை. ‘நான் அவரிடம் பேசணும்’ என, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கூறியதாக கூறினார். எம்.ஜி.ஆர்., பேசினார். ‘டெல்லி போய்க் கொண்டிருக்கிறேன். வந்த பின், பாருங்கள்’ எனக் கூறினார். தி.நகர் அலுவலகத்தில் சென்று சந்தித்தேன். ‘நடிகனுக்கு உடல் தான் மூலதனம். அதை நன்றாக பார்த்துக் கொள். சண்டை காட்சியில், ‘ரிஸ்க்’ எடுக்காதே’ எனக் கூறினார். ‘திருமணம் எப்போது’ எனக் கேட்டார். ‘முதலில், திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் திருமணத்திற்கு வருகிறேன். பெண்ணைப் பார்த்ததும், முதலில் என்னிடம்தான் சொல்ல வேண்டும்’ என்றார். அதன் பின், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், என் மனைவி, லதாவைப் பார்த்தேன்; சத்யமாய் சொல்கிறேன்… என் அண்ணனிடம் கூடச சொல்லவில்லை, முதலில் எம்.ஜி.ஆரிடம்தான் விஷயத்தைத் தெரிவித்தேன்; மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் லதா வீட்டில் சம்மதிக்கவில்லை.
ஐந்து மாதங்கள் கழித்து, என்னாச்சு எனக் கேட்டார். ஒப்புக்கொள்ள தாமதிக்கின்றனர் என, கூறினேன். அப்படி சொல்லி, இரண்டு மூன்று நாட்களில் ஒப்புக் கொண்டனர். ஒய்.ஜி.பார்த்தசாரதி உறவினர், லதா என்பதால், எம்.ஜி.ஆர்., போன் செய்து, ‘ஏன் தயங்குகிறீர்கள்; கொஞ்சம் கோபக்காரன். உங்கள் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்வார்’ என, கூறியிருக்கிறார். இன்று, நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், எம்.ஜி.ஆர்! அதில், ஊடகங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஒய்.ஜி.பி.,யோட மனைவி இப்பவும் உயிரோட இருக்காங்க; அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

கடந்த, 1984ல், கோடம்பாக்கத்தில், ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டினேன். தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பித்தேன்; அனுமதி கிடைக்கவில்லை; வேலையை நிறுத்தினேன். ஒரு நபர், பைலைத் தடுக்கிறார். நான் அவரைச் சந்திக்க சென்ற போது, அனுமதி அளிக்கவில்லை. அதன் பின், நண்பர்கள், ‘முதல்வரைச் சென்று பாருங்கள்’ எனக் கூறினர். எனக்கு யாரிடமும் கேட்டுப் பழக்கமில்லை. சரி, வேறு வழியில்லை. ஒரு நாள், மும்பையிலிருந்தேன். முதல்வரைப் பார்க்க நேரம் கேட்டேன். உடனே கிடைத்தது. மறுநாள், ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தேன். கோடம்பாக்கத்தில் மண்டபம் கட்டுகிறேன். ஒரு நபர் பிரச்னை செய்கிறார் எனக் கூறினேன். ‘மும்பை ஷூட்டிங் முடித்துவிட்டு வாருங்கள்’ எனக் கூறினார். ‘ஷூட்டிங்’ முடித்து சென்றேன். நான், ஆறு மாதங்களாக அனுமதி கேட்ட நபர், கை கட்டியபடி அவர் முன் இருந்தார். ‘இவர் யார் தெரியுமா’ என, என்னைக் காட்டி அவரிடம் எம்.ஜி.ஆர்., கேட்டார். ‘இந்த காலத்தில் பணம் சம்பாதிப்பதே கஷ்டம். நல்ல காரியம் செய்கிறார். தொல்லை கொடுக்கலாமா’ என்றார், எம்.ஜி.ஆர். அப்போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசுக்கு போன் செய்தார். மூன்றே நாளில் சான்றிதழ் கிடைத்தது. இதில் ஊடகங்களுக்கு சந்தேகம் இருந்தால், திருநாவுக்கரசரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

எம்.ஜி.ஆர்., ஒரு தெய்வப்பிறவி. அவரை இறைவன் இயக்கினான். அவர் குறித்துப் பேசினால், அ.தி.மு.க., ஓட்டு, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை இழுக்கப் பார்க்கிறார் என்பார்கள்… ஹாஹாஹா…,” என்று முடித்தார் ரஜினி.

ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி, நேற்று மாலை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, காரில் புறப்பட்டார். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, வேலப்பன் சாவடி செல்வதை அறிந்த ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், கோயம்பேட்டில் இருந்து, நிகழ்ச்சி நடந்த இடம் வரை, சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். ரஜினியை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களைப் பார்த்ததும், ரஜினி இருக்கையில் அமர்ந்தவாறு இரு கரம் கூப்பி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு பயணித்தார். வேலப்பன்சாவடி அருகே சென்றதும், காரின், மேல் கண்ணாடி திறப்பை திறந்து நின்றவாறு, ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தபடி பல்கலைக்கழகத்துக்குள் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *